search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேவேந்திர பட்னாவிசுடன் உத்தவ் தாக்கரே திடீர் சந்திப்பு
    X

    தேவேந்திர பட்னாவிசுடன் உத்தவ் தாக்கரே திடீர் சந்திப்பு

    • கடந்த 5-ம் தேதி நடந்த விழாவில் தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரியாக பதவியேற்றார்.
    • மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசை உத்தவ் தாக்கரே சந்தித்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 20-ம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் 23-ம் தேதி வெளியானது.

    இதில் பா.ஜ.க, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து மும்பையில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற பிரமாண்ட விழாவில் தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரியாக பதவியேற்றார்.

    சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் ஆகியோர் துணை முதல் மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில், சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசை நாக்பூர் விதான் பவனில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது பட்னாவிசுக்கு உத்தவ் தாக்கரே பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

    இந்தச் சந்திப்பின்போது உத்தவ் தாக்கரேவுடன் ஆதித்யா தாக்கரே உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×