search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து..  அமைச்சரவையில்  தீர்மானம் நிறைவேற்றிய உமர் அப்துல்லா
    X

    ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து.. அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிய உமர் அப்துல்லா

    • இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப் பட்ட பிறகு நடைபெற்ற முதல் சட்டமன்ற மன்ற தோ்தல் இதுவாகும்.
    • முதலமைச்சர் வாகனம் செல்லும்போது மற்ற வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்ற விதியை உமர் அப்துல்லா நீக்கினார்.

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி [என்சிபி] - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மத்திய பாஜக அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து [சட்டப்பிரிவு 370] ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப் பட்ட பிறகு நடைபெற்ற முதல் சட்டமன்ற மன்ற தோ்தல் இதுவாகும்.

    10 வருடங்களுக்குப் பிறகு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அங்கு அமைந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல்வராக நேற்று முன்தினம் [புதன்கிழமை] உமர் அப்துல்லா பதவி ஏற்றார். கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தற்போதைக்கு அமைச்சரவையில் பங்கு கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் உமர் அப்துல்லா முதலமைச்சரான பிறகு நேற்று கூட்டப்பட்ட முதல் அமைத்தவரைக் கூட்டத்தில், ஜம்மு காஷ்மீருக்கு நீக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    மாநில அந்தஸ்து பறிக்கப்படத்திலிருந்து அதை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வந்த என்.சி.பி. காங்கிரஸ், மெககபூபா முப்தியின் பி.டி.பி, இந்த தேர்தலில் மாநில அந்தஸ்து திரும்புவதைப் பிரதான வாக்குறுதியாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக முதலமைச்சர் வாகனம் சாலையில் செல்லும்போது மற்ற வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்ற கிரீன் காரிடார் விதியை உமர் அப்துல்லா ரத்து செய்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

    Next Story
    ×