என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
தேர்தல்களில் மறுபடியும் வாக்குச்சீட்டு.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
- புத்திசாலத்தனமான யோசனைகளை எப்படி பெறுகிறீர்கள்?
- மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
இந்தியாவில் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இயந்திரங்களை பயன்படுத்தாமல் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற உத்தரவிட வேண்டும் என்று கே.ஏ. பால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி போன்ற அரசியல் தலைவர்கள் கூட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு குறித்து கேள்வி எழுப்பி இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை விக்ரம் நாத் மற்றும் பி.பி. வரலே அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. விசாரணையின் போது, இது போன்ற புத்திசாலத்தனமான யோசனைகளை எப்படி பெறுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியதோடு, மனுவை தள்ளுபடி செய்வது உத்தரவிட்டது.
மேலும், "சந்திரபாபு நாயுடுவோ அல்லது ஜெகன் மோகன் ரெட்டியோ தேர்தலில் தோல்வியுற்றால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாக சொல்கிறார்கள், ஆனால் வெற்றி பெற்றால் முறைகேடு இருப்பதாக கூறுவதில்லை. இதை எப்படி பார்க்க முடியும்? நாங்கள் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம், இதை வாதாடும் இடம் இதுவல்ல," என்று நீதிபதிகள் கூறினர்.
விசாரணையின் போது ஆஜரான மனுதாரர் பால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று வாதிட்டார். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக காகித வாக்கு சீட்டு முறையை பயன்படுத்தும் அமெரிக்கா போன்ற நாடுகளின் நடைமுறைகளை இந்தியா பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
இதோடு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என எலான் மஸ்க் போன்ற முக்கிய பிரமுகர்கள் கூட மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறைகேடு குறித்து கவலை தெரிவித்துள்ளதாக மனுதாரர் பால் கூறினார்.