search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Akhilesh Yadav
    X

    லக்னோவில் 8 ரெயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றம்: பாஜக அரசை சாடிய அகிலேஷ்

    • நிஹால்கர் ரெயில் நிலையத்தின் பெயர் மகாராஜா பிஜிலி பாசி ரெயில் நிலையம் என்றும் மாற்றப்பட்டுள்ளது.
    • ஸ்மிருதி இரானியின் கோரிக்கையை அடுத்து ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோ கோட்டத்தில் உள்ள 8 ரெயில் நிலையங்களின் பெயர்கள் துறவிகள் (Saints) மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களால் மறுபெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.

    அதன்படி, காசிம்பூர் ஹால்ட் ரெயில் நிலையம் இனி ஜெய்ஸ் சிட்டி ரெயில் நிலையம் என்றும், நிஹால்கர் ரெயில் நிலையத்தின் பெயர் மகாராஜா பிஜிலி பாசி ரெயில் நிலையம் என்றும் மாற்றப்பட்டுள்ளது.

    இதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்து, ரெயில் நிலையங்களின் பெயர்களை மாற்றுவதற்கு பதிலாக ரெயில் நிலையங்களின் நிலையை மேம்படுத்துவதிலும், ரெயில் விபத்துகளை தடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    முன்னதாக, அமேதியின் கலாச்சார அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அமேதியின் முன்னாள் எம்.பி. ஸ்மிருதி இரானியின் கோரிக்கையை அடுத்து இந்த ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×