என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
ராமர் பெயரில் பூஜை... பா.ஜ.க. சார்பில் ரிட் மனு தாக்கல்
Byமாலை மலர்22 Jan 2024 9:39 AM IST (Updated: 22 Jan 2024 11:04 AM IST)
- அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழக கோவில்களில் நேரலையில் ஒளிபரப்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.
- பா.ஜ.க. மாநில செயலாளர் வினோஜ் பன்னீர்செல்வம் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் மோடி, முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இதனால் அயோத்தி நகரமே பக்தர்கள் வெள்ளமாக காட்சி அளிக்கிறது.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழக கோவில்களில் நேரலையில் ஒளிபரப்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.
ராமர் பெயரில் பூஜை, பஜனை, ஊர்வலம், அன்னதானம், அர்ச்சனை ஆகியவற்றுக்கு அனுமதிக்க கூடாது என்று காவல்துறைக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த பா.ஜ.க. மாநில செயலாளர் வினோஜ் பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் இன்று காலை 10.30 மணிக்கு முறையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Next Story
×