என் மலர்tooltip icon

    இந்தியா

    I.N.D.I.A. கூட்டணி செயல்திட்ட கமிட்டியின் தி.மு.க. உறுப்பினர்கள் யார் யார் தெரியுமா?
    X

    I.N.D.I.A. கூட்டணி செயல்திட்ட கமிட்டியின் தி.மு.க. உறுப்பினர்கள் யார் யார் தெரியுமா?

    • கூட்டணியில் தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்ற கழகம் கட்சியும் அங்கம் வகிக்கிறது.
    • பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் லட்சியம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

    இந்தியாவை ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்ட இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியின் மூன்றாவது சந்திப்பு இன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது.

    இந்த கூட்டணியில் தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்ற கழகம் கட்சியும் அங்கம் வகிப்பதால், இந்த சந்திப்பில் பங்கேற்ற பிறகு அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை திரும்பினார்.

    இக்கட்சியின் சார்பாக இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திட்ட கமிட்டியில் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் டி. ஆர். பாலு, பிரசார கமிட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, சமூக வலைதளங்களுக்கான பணிக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் ஊடகங்களுக்கான பணிக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் ஆராய்ச்சி பணிக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் அ. ராசா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    "பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் லட்சியம்" என சந்திப்பிற்கு பிறகு பேசிய மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

    Next Story
    ×