என் மலர்
இந்தியா

மும்பை கடற்கரையில் விபத்தில் சிக்கிய இந்திய கடற்படை ஹெலிகாப்டர்- 3 பேர் பத்திரமாக மீட்பு
- ரோந்து பணியின்போது திடீரென விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த கடற்படை உத்தரவிட்டுள்ளது.
மும்பை கடற்பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் என்கிற மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் இன்று விபத்தில் சிக்கியது.
இது இன்று காலை வழக்கமான ரோந்து பணியின்போது திடீரென விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து, உடனடியாக விரைந்த மீட்புக்குழுவினர் கடற்படை ரோந்து கப்பல் மூலம் விபத்தில் சிக்கிய மூன்று பணியாளர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த கடற்படை உத்தரவிட்டுள்ளது.
Next Story






