search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காலையில் தாசில்தாராக பதவி உயர்வு பெற்று மாலையில் ஓய்வுபெற்ற அதிகாரி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    காலையில் தாசில்தாராக பதவி உயர்வு பெற்று மாலையில் ஓய்வுபெற்ற அதிகாரி

    • தாலுகா அலுவலகத்திற்கு சென்ற ராஷ்மோன், அங்கு தாசில்தாராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
    • தாசில்தார் இருக்கையில் அமர்ந்த சில மணி நேரத்தில் ராஷ்மோனுக்கு இன்னொரு உத்தரவு வந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியை அடுத்த ஆலுவா தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வந்தவர் ராஷ்மோன்.

    இவர் கடந்த ஆண்டு தாசில்தாராக பதவி உயர்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் இவரது பதவி உயர்வு தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்தது.

    இந்த நிலையில் இவருக்கு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு அரசிடம் இருந்து ஒரு உத்தரவு வந்தது. அதில் அவரை அங்கமாலி அலுவலக நிலமெடுப்பு தாசில்தாராக நியமித்து இருப்பதாகவும், உடனே அந்த பதவியை ஏற்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

    இந்த உத்தரவு கிடைத்ததும் ராஷ்மோனுக்கு ஒருபக்கம் மகிழ்ச்சி என்றாலும் இன்னொரு புறம் வருத்தமும் ஏற்பட்டது. இதற்கு காரணம், அவரது பணிக்காலம் நேற்றுடன் முடிய இருந்தது. என்றாலும் தனக்கு கிடைத்த பதவி உயர்வை உடனே ஏற்றுக்கொள்ள முடிவு செய்த ராஷ்மோன், நேற்று முன்தினம் இரவே அங்கமாலி சென்றார்.

    நேற்று காலை தாலுகா அலுவலகத்திற்கு சென்ற ராஷ்மோன், அங்கு தாசில்தாராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவர், தாசில்தார் இருக்கையில் அமர்ந்த சில மணி நேரத்தில் அவருக்கு இன்னொரு உத்தரவு வந்தது. அதில் அன்று மாலையே அவர் பணி ஓய்வு பெறுவதாக கூறப்பட்டிருந்தது. இதனை அறிந்த அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்றாலும் புதிய தாசில்தாருக்கு வாழ்த்து தெரிவித்த அவர்கள் அன்று மாலை வழியனுப்பு விழா நடத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    காலையில் தாசில்தார் பொறுப்பேற்று, மாலையில் ஓய்வு பெற்ற ராஷ்மோன் கூறும்போது, ஒரே நேரத்தில் இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவித்த நபர் நான்தான், என்றார்.

    Next Story
    ×