என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![பிரதமருக்கு நன்றி! அர்த்தமுள்ள முயற்சியால் ஒரு கோடி பணியிடங்களை நிரப்ப வேண்டும்- வருண் காந்தி பிரதமருக்கு நன்றி! அர்த்தமுள்ள முயற்சியால் ஒரு கோடி பணியிடங்களை நிரப்ப வேண்டும்- வருண் காந்தி](https://media.maalaimalar.com/h-upload/2022/06/14/1712248-varun.jpg)
X
பிரதமருக்கு நன்றி! அர்த்தமுள்ள முயற்சியால் ஒரு கோடி பணியிடங்களை நிரப்ப வேண்டும்- வருண் காந்தி
By
மாலை மலர்14 Jun 2022 2:31 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் உறுதிமொழியை நிறைவேற்ற இன்னும் வேகமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
- வேலையற்ற இளைஞர்களின் வலி மற்றும் வேதனையை புரிந்துகொண்டதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி.
அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேரை பணியமர்த்த பல்வேறு அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்தது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பாஜக எம்.பி வருண் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வருண் காந்தி கூறியதாவது:-
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், காலியாக உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான பணியிடங்களை நிரப்பவும் அர்த்தமுள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் உறுதிமொழியை நிறைவேற்ற இன்னும் வேகமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
வேலையற்ற இளைஞர்களின் வலி மற்றும் வேதனையை புரிந்துகொண்டதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
X