search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரு கிலோ சுத்தமான நெய் ரூ. 320-க்கு வழங்கவே முடியாது.. தெலுங்கு தேசம் தடாலடி
    X

    ஒரு கிலோ சுத்தமான நெய் ரூ. 320-க்கு வழங்கவே முடியாது.. தெலுங்கு தேசம் தடாலடி

    • தவறான முடிவுகள் வரவும் வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • தரமான தூய நெய்யின் சந்தை விலை ஒரு கிலோவுக்கு ரூ.900 ஆக இருக்கிறது.

    திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கிய நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை உள்ளது என்ற குற்றச்சாட்டில் சிக்கி இருக்கும் ஏ.ஆர். டைரி ஃபுட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் கலப்படம் பற்றிய குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    தமிழ்நாட்டின் திண்டுக்கல்லைச் சேர்ந்த இந்நிறுவனம், திருமலை திருப்பது தேவஸ்தானத்திற்கு நெய் விநியோகம் செய்யும் பல நிறுவனங்களில் ஒன்று ஆகும். "முதலில், NDDB ஆய்வக சோதனை அறிக்கை, நெய் மாதிரி ஏ.ஆர். டைரி நிறுவனத்தில் இருந்து வந்தது என்று கூறவில்லை. தவறான முடிவுகள் வரவும் வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது."

    "இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நாங்கள் வழங்கிய நெய் டேங்கர்களை சோதனை அறிக்கைகள் திருப்திப்படுத்திய பிறகே திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்றுக்கொண்டது. திருப்பதி தேவஸ்தானம் விற்பனையாளர்களை மாற்றியதால் ஜூலைக்குப் பிறகு நாங்கள் நெய் விநியோகம் செய்வதை நிறுத்திவிட்டோம். மாட்டுத் தீவனம் உட்பட நெய்யில் வெளிநாட்டுக் கொழுப்பின் தடயங்கள் காணப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன," என்று ஏஆர் டைரி ஃபுட் நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டுத் துறைத் தலைவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

    தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனம் வெங்கட ரமண செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், முந்தைய ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் திருப்பதி தேவஸ்தானம் நெய் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ஒரு கிலோ ரூ. 320-க்கு வழங்குவதாக கூறிய நிறுவனத்திற்கு வழங்கியுதாக தெரிவித்தார்.

    "நல்ல தரமான தூய நெய்யின் சந்தை விலை ஒரு கிலோவுக்கு ரூ.900 ஆக இருக்கும் போது, அந்த விகிதத்தில் சுத்தமான மற்றும் கலப்படமற்ற நெய்யை வழங்க முடியாது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான அரசு இவ்வளவு குறைந்த விலையில் ஏலத்தை தேர்வு செய்து நெய்யின் தரத்தில் சமரசம் செய்தது," என்று வெங்கட ரமண கூறினார்.

    Next Story
    ×