என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் - மத்திய அமைச்சரவை ஏற்பு...
- முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருந்தது
- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்த ஆட்சிக் காலத்துக்குள்ளாகவே அமல்படுத்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அதை உறுதிப்படுத்தும் வகையில் பேசி இருந்தார். இதுதொடர்பாக ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பதிவு செய்து ஆராய்ந்து வந்தது.
தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வை இறுதி செய்து அந்த அறிக்கையை மத்திய அமைச்சரவையில் சமர்ப்பித்தது. இந்நிலையில் இன்று [செப்டம்பர் 18] பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தின் 100 நாள் நிறைவு கொண்டாட்டங்களை ஒட்டி ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.