என் மலர்
இந்தியா
அவரது வாக்கு வங்கி என்பதால் ஊடுருவலை தடுக்கமாட்டார்: மம்தா மீது அமித் ஷா விமர்சனம்
- நாங்கள் 30 இடங்களுக்கு மேல் பிடிப்போம். மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா அரசு அமைந்த பிறகு நாங்கள் ஊடுருவலை தடுத்து நிறுத்துவோம்.
- காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று மேற்கு வங்காளத்தில் உள்ள தக்சின் தினாஜ்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மம்தா பானர்ஜி ஊடுருவலை தடுக்கமாட்டார். ஏனென்றால் ஊடுருபவர்கள் மம்தா பானர்ஜியின் வாக்கு வங்கி. பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவல் ஊடுருவலை தடுக்க முடியும். நாங்கள் அசாம் மாநிலத்தில் ஊடுருவலை தடுத்து நிறுத்தினோம். நாங்கள் 30 இடங்களுக்கு மேல் பிடிப்போம். மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா அரசு அமைந்த பிறகு நாங்கள் ஊடுருவலை தடுத்து நிறுத்துவோம். பிரதமர் மோடியின் இந்த வாக்குறுதியை கூறுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.
ஏப்ரல் 17-ந்தேதி ராம் நவமி. கடவுள் ராமர் பிறந்த தினம். ஐந்து வருடத்திற்குள் ராமர் கோவில் விசயத்தை பிரதமர் மோடி முடித்து வைத்தார். பூமி பூஜை நடத்தப்பட்டு கோவில் கட்டப்பட்டது. 500 வருடத்திற்குப் பிறகு கடவுள் ராமர் அவரது பிறந்த இடத்தில் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். ராம நவமி அவரது பிரமாண்ட வீட்டிற்குள் நடைபெற இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முஸ்லிம் தனிச்சட்டம் கொண்டு வரப்படும், பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது எனச் சொல்கிறார்கள். அவர்களுடைய தேர்தல் பிரசாரத்தில் தாய்லாந்தின் போட்டோ இடம் பிடித்துள்ளது. ஏனென்றால், ராகுல் பாகா தொடர்ச்சியாக விடுமுறைக்காக அங்கே செல்கிறார்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.