search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அடுத்த கால் நூற்றாண்டு இந்தியாவின் வளர்ச்சியில் ஜம்மு  காஷ்மீர் முக்கியப் பங்கு வகிக்கும்- மத்திய மந்திரி உறுதி
    X

    மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

    அடுத்த கால் நூற்றாண்டு இந்தியாவின் வளர்ச்சியில் ஜம்மு காஷ்மீர் முக்கியப் பங்கு வகிக்கும்- மத்திய மந்திரி உறுதி

    • பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.
    • பாகிஸ்தான் அகதிகளுக்கு மாநில தேர்தலில் வாக்களிக்க உரிமை மறுக்கப்பட்டது.

    ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மேற்கு பாகிஸ்தானை சேர்ந்த அகதிகளின் பேரணியில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    ஐம்மு:

    பாகிஸ்தானில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட இந்திய வம்சாவளி அகதிகள், பிரிவினைக்குப் பிறகு, இந்திய பக்கம் தஞ்சம் அடைய குறுகிய கால அவகாசத்தில் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் விட்டு வெளியேற நேரிட்டது. அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

    நாடு பிரிக்கப்படுவதற்கு முந்தைய மேற்கு பாகிஸ்தானில் பிறந்த டாக்டர் மன்மோகன் சிங், குஜ்ரால் ஆகிய இருவரும் இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற நிலையில், ஜம்மு காஷ்மீரில் குடியேறிய பாகிஸ்தான் அகதிகளுக்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கவோ, போட்டியிடவோ உரிமை மறுக்கப்பட்டது. சில குறுகிய மனப்பான்மை கொண்டவர்களின் சூழ்ச்சிகளால், பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.

    ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019 ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி 370வது சட்டப்பிரிவுவை ரத்து செய்ததன் மூலம் பிரதமர் மோடி இந்த முரண்பாட்டை சரிசெய்தார். அதன்பிறகு, இப்போது ஜம்மு காஷ்மீரில் குடியேறிய பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகள் கூட தேர்தலில் போட்டியிடலாம். மேலும் எம்எல்ஏவாகவோ அல்லது அமைச்சராகவோ அல்லது முதலமைச்சராகவோ கூட அவர்கள் ஆகலாம்.

    அடுத்த கால் நூற்றாண்டு இந்தியாவின் வளர்ச்சிப் பாதை பொன்னான அத்தியாயத்தை பதிவு செய்யும். அதில் ஜம்மு காஷ்மீர் முக்கியப் பங்கு வகிக்கும். பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ், ஜம்மு காஷ்மீர் போன்ற நாட்டின் ஒதுக்குப்புறப் பகுதிகளின் திறன்கள் இப்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன. ஜம்மு காஷ்மீரில் விவசாய துறையில் பல புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×