search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைப் பயன்படுத்துவதில் இந்தியாவிற்கு நான்காவது இடம்- மத்திய மந்திரி தகவல்
    X

    மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

    புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைப் பயன்படுத்துவதில் இந்தியாவிற்கு நான்காவது இடம்- மத்திய மந்திரி தகவல்

    • தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
    • சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் செயல்படுகின்றன.

    டெல்லியில் நிதி ஆயோக் மற்றும் அணுசக்தித் துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது:'

    உலகம் முழுவதும் தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கு அணுசக்தியின் பங்கு முக்கியமானதாக இருக்கும். நாங்கள் ஏற்கனவே தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கான நடவடிக்கைகளை, புதைபடிவமற்ற ஆற்றல் வளங்களின் வாயிலாக மேற்கொண்டு வருகின்றோம்.

    தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கான உறுதிப்பாட்டை நிறைவேற்ற 300 மெகாவாட் திறன் கொண்ட சிறிய மாடுலர் ரியாக்டர்களை மேம்படுத்த இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த முக்கியமான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் தனியார் துறை மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கேற்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சீனா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைப் பயன்படுத்துவதில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. பிரதமரின் சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் செயல்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×