என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அமைதி மற்றும் வளர்ச்சியின் புதிய விடியலை ஜம்மு காஷ்மீர் பார்த்து வருகிறது- மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்
- ஒரே ஆண்டுக்குள் 140 திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- நவீன வசதிகள் கொண்ட திரைப்பட ஸ்டுடியோ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றிய ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் அதிகாரிகள் தற்போது டெல்லியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் பிரதமர் அலுவலக விவகாரத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
ஜம்மு- காஷ்மீருக்கு பிரதமர் மோடி உயர் முன்னுரிமை அளித்து வருகிறார் .வளர்ச்சி மற்றும் அமைதியின் புதிய விடியலை ஜம்மு-காஷ்மீர் கண்டு வருகிறது. 2022 ஜனவரி முதல் இதுநாள் வரை 1.62 கோடி சுற்றுலா பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்துள்ளனர். 75 ஆண்டு சுதந்திர வரலாற்றில் இதுவே மிகவும் உயர்ந்த எண்ணிக்கையாகும்.
நாட்டில் சிறப்பாக நிர்வகிக்கப்படும் யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக ஜம்மு-காஷ்மீரை மாற்றுவதற்கான பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 370 -வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின், ரூ. 56 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
ஒரே ஆண்டுக்குள் 140 படப்பிடிப்புகளுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரின் திறமைமிக்க இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, நவீன வசதிகள் கொண்ட திரைப்பட ஸ்டுடியோ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.