search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்கும் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள்
    X

    இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்கும் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள்

    • கன்னாவின் பாட்டனார் ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஆவார்
    • பல்வேறு துறையை சேர்ந்த முக்கியஸ்தர்களை இந்த குழு சந்திக்கிறது

    இம்மாதம் 15ம் தேதி இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

    புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறவிருக்கும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி உரையாற்றுவார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்காவின் பாராளுமன்றத்தை சேர்ந்த ஒரு குழு வருகிறது.

    இந்திய மற்றும் இந்திய அமெரிக்கர்களின் நலனுக்கான அமெரிக்கா பாராளுமன்ற அமைப்பின் தலைவர்களான அமெரிக்காவின் பாராளுமன்றத்தை சேர்ந்த இந்திய-அமெரிக்கர் ரோ கன்னா மற்றும் மைக்கேல் வால்ட்ஸ் ஆகிய இருவர் இக்குழுவிற்கு தலைமை தாங்குகின்றனர்.

    இவர்களுடன் டெபோரா ராஸ், கேட் கம்மாக், ஸ்ரீ தானேதார், ரிச் மெக்கார்மிக், எட் கேஸ் மற்றும் ஜாஸ்மின் க்ராக்கெட் ஆகியோர் இணைந்து வருகின்றனர்.

    இவர்கள் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிறகு, இந்தியாவின் வர்த்தக, தொழில்நுட்ப, அரசாங்க, மற்றும் திரைத்துறை பிரமுகர்களை மும்பை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் சந்திக்க இருக்கிறார்கள். மேலும், புது டெல்லியில் உள்ள ராஜ் காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவகத்திற்கும் செல்கிறார்கள்.

    "இப்பயணத்தில் இந்திய பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மற்றும் பல பிரமுகர்களை சந்திக்க இருக்கிறோம். இந்தியாவிற்கு இந்த குழுவினருடன் வருவதும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதும் ஒரு பெருமைக்குரிய செயல். என் பாட்டனார் அமர்நாத் வித்யாலங்கர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். இது எனக்கு ஒரு உணர்வுபூர்வமான பயணம். இந்திய-அமெரிக்க உறவில் இது ஒரு மைல்கல்" என இந்த வருகை குறித்து ரோ கன்னா கருத்து தெரிவித்தார்.

    Next Story
    ×