search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் டாக்டர் பாலியல் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு
    X

    நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் டாக்டர் பாலியல் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

    • கொல்கத்தாவில் உள்ள சியால்டா கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
    • விசாரணை அனைத்தும் கடந்த 9-ந்தேதி நிறைவடைந்தது.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவ்வழக்கு, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள சியால்டா கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணை அனைத்தும் கடந்த 9-ந்தேதி நிறைவடைந்தது.

    நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கில் இன்று (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது.

    டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை போல நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் சியல்டா கோர்ட்டு வழங்கும் தீர்ப்புக்காக நாடே எதிர்பார்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×