என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மணிப்பூரில் மீண்டும் வன்முறை.. 5 பேர் பலி - அமைச்சரவை கூட்டத்துக்கு அவரச அழைப்பு விடுத்த முதல்வர்
- குக்கி கிளர்க்காரர்கள் துப்பாக்கி, ராக்கெட், டிரோன் என அதிநவீன தொழில்நுட்ப கருவிகளின்மூலம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்
- நேற்று மதியம் முன்னாள் முதல்வர் மைரெம்பாம் கொய்ரெங் வீட்டு வளாகத்தில் ராக்கெட் குண்டு விழுந்து வெடித்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்
மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மகக்ளுடையிலான மோதல் கலவரமாக வெடித்து 220 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடந்த வருடம் முதல் நடந்து வரும் இந்த கலவரத்தில் இரண்டு குக்கி சமூகப் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியான பின் நாட்டு மக்களின் கவனமும் அரசியல்வாதிகளின் கவனமும் மணிப்பூரை நோக்கி திரும்பியது.
இதுவரை எந்த தீர்வும் காணப்படாமல் இன்றளவும் கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. சுமார் 70,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆயுதமேந்திய குக்கி கிளர்க்காரர்கள் துப்பாக்கி, ராக்கெட், டிரோன் என அதிநவீன தொழில்நுட்ப கருவிகளின்மூலம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு இம்பாலில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி டிரோன் மூலம் மெய்தி இன மக்கள் வசிக்கும் 2 கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். நேற்றைய தினம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் பல இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன. மெய்தி இனமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தாக்குதல்கள் அரங்கேறின. பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ரெங் பகுதியில் நேற்று மதியம் முன்னாள் முதல்வர் மைரெம்பாம் கொய்ரெங் வீட்டு வளாகத்தில் ராக்கெட் குண்டு விழுந்து வெடித்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 13 வயது சிறுமி உள்பட 5 பேர் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் இன்று [சனிக்கிழமை] ஜிரிபாம் மாவட்டத்தில் நடந்த தாக்குதல்களில் பொதுமக்களில் ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மாவட்டத் தலைநகரில் இருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தவரைச் சுட்டுக்கொன்றனர்.
தொடர்ந்து மாவட்டத் தலைநகரில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள இடத்தில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கு இடையில் பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் மூன்று பழங்குடியின போராட்டக்காரர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர் மணிப்பூரில் மீண்டும். மணிப்பூரில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கத்தொடங்கியுள்ள நிலையில் அம்மாநில பாஜக முதல்வர் பைரேன் சிங் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்