search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    400 இடங்களை விரும்புவது ஏன் தெரியுமா?- பிரதமர் மோடி
    X

    400 இடங்களை விரும்புவது ஏன் தெரியுமா?- பிரதமர் மோடி

    • பா.ஜனதா தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத்தில் ஏற்கனவே 400 இடங்ளுக்கு மேல் பெற்றுள்ளது.
    • அதை ஜம்மு-காஷ்மீர் மாநலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறந்த அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்காக பயன்படுத்தினோம்.

    பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் தார் என்ற பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

    அம்பேத்கரை காங்கிரஸ் குடும்பத்தினர் மிகவும் வெறுக்கின்றனர் என்பதுதான் உண்மை. பா.ஜனதா 400 இடங்களை பெற்றால், பிரதமர் மோடி அரசியலமைப்பை மாற்றிவிடுவார் என காங்கிரஸ் வதந்தியை பரப்பு வருகிறது.

    பா.ஜனதா தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத்தில் ஏற்கனவே 400 இடங்ளுக்கு மேல் பெற்றுள்ளது. நாங்கள் அதை ஜம்மு-காஷ்மீர் மாநலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறந்த அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்காக பயன்படுத்தினோம் என்பதை மக்கள் புரிந்து கொள்வது முக்கியமானது.

    காங்கிரஸ் மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ கொண்டு வரக்கூடாது என்பதில் மோடி 400 இடங்களை விரும்புகிறார். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பாப்ரி லாக் போட்டுவிடக்கூடாது என்பதற்காக மோடி 400 இடங்களை விரும்புகிறார்.

    ஓபிசி இடஒதுக்கீட்டை அவர்களது வாக்கு வங்கிக்கு அளிப்பதை தடுத்த மோடி 400 இடங்களை விரும்புகிறார். எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை கடந்த ஆண்டுகளாக நீட்டிக்க 400-க்கும் அதிகமான இடங்களை பயன்படுத்தியுள்ளோம். பழங்குடியின பெண்ணை நாட்டின் ஜனாதிபதியாக நியமனம் செய்ய, பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பயன்படுத்தியுள்ளோம்.

    மோடி 400 இடங்களை கேட்பது நாட்டின் காலி இடங்களை, தீவுகளை மற்ற நாடுகளுக்கு காங்கிரஸ் அளித்து விடக்கூடாது என்பதற்காகத்தான். எஸ்.சி., எஸ்.டி, மற்றும் ஓபிசி-யின் இடஒதுக்கீடு பறிக்கப்பட்டு அவர்களுடைய வாக்கு வங்கிக்குக்கு அளிக்க முடியாது. வாக்கு வங்கியின் அனைத்து ஜாதிகளும் ஓபிசி என ஒரே இரவில் அறிவிக்க முடியாது.

    அரசியலமைப்பை உருவாக்குவதில் அம்பேத்கருக்கு பங்கு மிகக்குறைவு என்றும், அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் நேரு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்தார் என்றும் காங்கிரஸ் கூறத் தொடங்கியது. அம்பேத்கரையும் அரசியல் சாசனத்தையும் முதுகில் குத்தியது காங்கிரஸ்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×