search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாடு நிலச்சரிவு- ரூ.4 கோடி ஒதுக்கியது கேரள அரசு
    X

    வயநாடு நிலச்சரிவு- ரூ.4 கோடி ஒதுக்கியது கேரள அரசு

    • முண்டகை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட 3 இடங்களில் அடுத்தடுத்து மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
    • 600-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்ததும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

    கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை கொட்டியதன் காரணமாக கடந்த 29-ந்தேதி முண்டகை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட 3 இடங்களில் அடுத்தடுத்து மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் 94 நிவாரண முகாம்களில் உள்ளனர்.

    600-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்ததும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதும் தெரிய வந்துள்ளது. அவர்களை மீட்பதற்கான பணிகள் இன்று 5வது நாளாக நடந்து வருகிறது. இதுவரை 340 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

    சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆவதால் மாயமானவர்கள் நிலை என்ன ஆகியிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது.

    எது எப்படியென்றாலும் கடைசி நபர் மீட்கப்படும் வரை தேடுதல் பணியை தொடர கேரள அரசு முடிவு செய்திருக்கிறது.

    இந்நிலையில், முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, உடனடியாக ரூ.4 கோடி ஒதுக்கப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

    விரைவாக, மாநில பேரிடர் மேலாண்மை நிதி, வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படும் என்றும், இந்த தொகை மக்களின் நிவாரணப் பணிகளுக்கு மட்டும் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×