என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
நிவாரணம் கேட்ட நடுத்தர வர்க்கத்தினர்: நிதி மந்திரி அளித்த பதில் இதுதான்
- நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் வழங்கும்படி சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
- உங்களுடைய ஆலோசனைகளை அரசு கவனிக்கும் என மத்திய நிதி மந்திரி பதிலளித்தார்.
புதுடெல்லி:
அக்டோபர் மாதத்தின் சில்லரை பணவீக்கம் 6.21 சதவீதமாக அதிகரித்திருந்தது. செப்டம்பர் மாதத்தின் உணவு பணவீக்கம் 10.8 சதவீதமாக பதிவாகியுள்ளது. எனவே நடுத்தர வர்க்கத்தினரை பணவீக்கம் மிகவும் அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், துஷார் சர்மா என்ற எக்ஸ் வலைதள பயனர் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனைக் குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதில், நாட்டுக்காக உங்களுடைய பங்களிப்பு மற்றும் முயற்சிகளை வெகுவாக பாராட்டுகிறோம். நீங்கள் எங்களுடைய மரியாதையை பெற்றுள்ளீர்கள். நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறிது நிவாரணம் அளிக்கும்படி உங்களை தாழ்மையுடன் கேட்கிறேன்.
இது சற்று சவாலானது என்பது தெரிந்தபோதும், இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன் என கேட்டிருந்தார்.
இந்தப் பதிவிற்கு பதிலளித்துள்ள நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், உங்களுடைய கனிவான வார்த்தைகள் மற்றும் புரிதல்களுக்கு நன்றி. உங்கள் கவலையைப் புரிந்து கொண்டுள்ளேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதில் அளிக்கக்கூடிய அரசு. மக்களின் குரல்களை கேட்டு அதற்கு பதிலளிக்கக் கூடியது. உங்களுடைய ஆலோசனைகள் மதிப்புமிக்கவை என பதிவிட்டுள்ளார்.