search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நீங்க ஒரு பெண்.. உங்களுக்கு எதுவும் தெரியாது? - அவையில் பெண் எம்.எல்.ஏ.வைக் கண்டித்த நிதிஷ் குமார்
    X

     

    'நீங்க ஒரு பெண்.. உங்களுக்கு எதுவும் தெரியாது?' - அவையில் பெண் எம்.எல்.ஏ.வைக் கண்டித்த நிதிஷ் குமார்

    • இன்று அரசுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவைத் தடுக்க சிறப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • நிதிஷ் குமாரின் இந்த கருதினால் அவையில் அமளி எழுந்தது

    பீகார் மாநில சட்டமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் இன்று அரசுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவைத் தடுக்க சிறப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நடந்த சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் நடந்தது.

    அப்போது லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ ரேகா தேவி, ஆளும் ஜனதா தள அரசின் பெண்கள் தொடர்பான கொள்கைகள் குறித்து விமர்சித்துப் பேசிக்கொண்டிருந்தார். திடீரென கோபமடைந்த முதல்வர் நிதிஷ் குமார், நீங்கள் ஏன் பேசுகிறீர்கள், நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு என்ன தெரியும், அமைதியாக உட்கார்ந்து கவனிங்க என்று கோபமாக கூறினார்.

    நிதிஷ் குமாரின் இந்த கருதினால் அவையில் அமளி எழுந்த நிலையில், தொடர்ந்து பேசிய நிதிஷ் குமார், 'நீங்கள் தேவையில்லாத விஷயங்களை பேசிக்கொண்டிருக்கிறீர்கள், நீங்கள்[ஆர்ஜேடி] பெண்களுக்காக என்ன செய்தீர்கள், 2005 க்கு பிறகு நாங்கள் தான் பெண்களை உயர்த்தினோம்.அதனால் தான் நான் சொல்கிறேன். அதனை அமைதியாக கவனியுங்கள், கவனிக்காவிட்டால் அது உங்களின் தவறுதான்' என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×