search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சாகிர் உசேன் மறைவு- பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சாகிர் உசேன் மறைவு- பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்

    • பிரபல தபேலா இசைக்கலைஙர் சாகிர் உசேன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • இந்திய பாரம்பரிய இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய உண்மையான மேதையாக அவர் நினைவுகூரப்படுவார்.

    பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன் (73) உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார்.

    இதைதொடர்ந்து, சாகிர் உசேன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலகளவில் உள்ள திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சாகிர் உசேன் மறைவுக்கு பிரமதர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் சாகிர் ஹுசைன் ஜியின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம்.

    இந்திய பாரம்பரிய இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய உண்மையான மேதையாக அவர் நினைவுகூரப்படுவார்.

    அவர் தனது இணையற்ற தாளத்தால் மில்லியன் கணக்கானவர்களைக் கவர்ந்த தபேலாவை உலக அரங்கிற்கு கொண்டு வந்தார்.

    இதன் மூலம், உலகளாவிய இசையுடன் இந்திய பாரம்பரிய மரபுகளை தடையின்றி இணைத்தார். இதனால் கலாச்சார ஒற்றுமையின் சின்னமாக மாறினார்.

    அவரது சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் மற்றும் ஆத்மார்த்தமான இசையமைப்புகள் இசையமைப்பாளர்கள் மற்றும் இசை ஆர்வலர்களின் தலைமுறைகளை ஊக்குவிக்கும்.

    அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உலக இசை சமூகத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    தொடர்ந்து, சாகிர் உசேன் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

    அதில் ராகுல் காந்தி கூறுகையில், " சிறந்த தபேலா கலைஞர் உஸ்தாத் சாகிர் உசேனின் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

    அவரது மறைவு இசை உலகிற்கு பேரிழப்பாகும். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    உஸ்தாத் சாகிர் ஹுசைன் தனது கலையின் பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார், அது எப்போதும் நம் நினைவில் இருக்கும்" என்றார்.

    Next Story
    ×