என் மலர்
கிரிக்கெட் (Cricket)
மழையால் ஆட்டம் பாதிப்பு: நான்காம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 515/3
- நான்காம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 515 ரன்கள் எடுத்துள்ளது.
- அந்த அணியின் ஹஷ்மதுல்லா 179 ரன்னுடன் களத்தில் உள்ளார்.
புலவாயோ:
ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 586 ரன்கள் குவித்தது. சீன் வில்லியம்ஸ் சிறப்பாக ஆடி 154 ரன்னும், கேப்டன் கிரெய்க் எர்வின் 104 ரன்னும் எடுத்தனர். பென்னெட் 110 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பென் கர்ரன் 74 ரன்னிலும், கைடனோ 46 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் கசன்பர் 3 விக்கெட்டும், நவீத் சட்ரன், ஜஹிர் கான், ஜியா உர் ரெஹ்மான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 425 ரன்கள் குவித்தது. ரஹமத் ஷா இரட்டை சதமடித்தும், ஹஷ்மதுல்லா சதமும் அடித்து அசத்தினர்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ரஹமத் ஷா 234 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹஷ்மதுல்லா ஷாஹிடி பொறுப்புடன் ஆடி வருகிறார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி இதுவரை 364 ரன்கள் சேர்த்துள்ளது.
இறுதியில், நான்காம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 515 ரன்கள் குவித்துள்ளது. ஹஷ்மதுல்லா 174 ரன்னும், அப்சர் சசாய் 46 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
முதல் இன்னிங்சே இன்னும் முடிவடையாததால் இந்தப் போட்டி டிராவில் முடியும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.