என் மலர்
கிரிக்கெட் (Cricket)
எம்.எஸ்.தோனி பாணியில் ஓய்வை அறிவித்த அஸ்வின்
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு இடையே தனது ஓய்வு முடிவை அறிவித்த 3-வது இந்தியராக அஸ்வின் உள்ளார்.
- 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தோனி தனது ஓய்வை அறிவித்தார்.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதல் 3 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று டிராவில் முடிந்தது. இந்த தொடரில் அஸ்வின் 2-வது போட்டியில் மட்டுமே விளையாடினார். முதல் மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் அவர் இடம் பெறவில்லை. இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அடிலெய்டு டெஸ்ட் போட்டியே அஸ்வினின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது.
இதன் மூலம் எம்.எஸ்.தோனி பாணியில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடருக்கு நடுவே ஓய்வை அறிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்திய சுற்றுப்பயணத்தின் போது எம்.எஸ்.தோனி தனது ஓய்வை அறிவித்தார். தொடரின் 3-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அணியின் கேப்டனாக இருக்கும் போது அவர் தனது ஓய்வை அறிவித்தார். தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 38.09 சராசரியில் 4,876 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு இடையே தனது ஓய்வு முடிவை அறிவித்த 3-வது இந்தியராக அஸ்வின் உள்ளார்.
ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அனில் கும்ப்ளே தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கும்ப்ளே ஓய்வு முடிவை அறிவித்தார்.
இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது தோனி 3-வது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அந்த வகையில் அஸ்வினும் தொடருக்கு நடுவே ஓவ்யு முடிவை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.