search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்திய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட்: 2-வது ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி
    X

    இந்திய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட்: 2-வது ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி

    • ஆஸ்திரேலியா அணிக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா.
    • இலக்கை ஆஸ்திரேலியா 47.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 169 ரன் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மெல்போர்ன்:

    இந்தியா 'ஏ' - ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் (4 நாள் ஆட்டம்) மெல்போர்னில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா ஏ 161 ரன்னும், ஆஸ்திரேலியா ஏ 223 ரன்னும் எடுத்தன. 62 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 73 ரன்கள் எடுத்திருந்தது. துருவ் ஜூரெல் 19 ரன்னுடனும், நிதிஷ்குமார் ரெட்டி 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய துருவ் ஜூரெல் 68 ரன்னிலும், நிதிஷ்குமார் 38 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த பிரசித் கிருஷ்ணா 29 ரன்னும், தனுஷ் கோடியன் 44 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். 77.5 ஓவர்களில் இந்தியா ஏ 229 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் கோரி ரோச்சிசியோலி 4 விக்கெட்டும், வெப்ஸ்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 47.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 169 ரன் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாம் கோன்ஸ்டாஸ் 73 ரன்னுடனும், வெப்ஸ்டர் 46 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும், முகேஷ் குமார், தனுஷ் கோடியன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    Next Story
    ×