search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இனிமேல் இஷ்டத்துக்கு தொடரில் இருந்து விலக முடியாது.. வீரர்களிடம் கறார் காட்டும் பி.சி.சி.ஐ
    X

    இனிமேல் இஷ்டத்துக்கு தொடரில் இருந்து விலக முடியாது.. வீரர்களிடம் கறார் காட்டும் பி.சி.சி.ஐ

    • பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மறுஆய்வுக் கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
    • ரோகித் சர்மா, கவுதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

    கடந்த சில மாதங்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு சோதனை காலமாக இருந்தது. நியூசிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டிராபியில் 1-3 என்ற கணக்கில் அடைந்த தோல்வி என தோல்விகள் இந்திய அணியை சுழற்றி சுழற்றி அடித்தது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) பெரிய புள்ளிகள் இந்த தொடர் தோல்விகளால் புழுங்கிக்கொண்டு உள்ளனர். இந்நிலையில் பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மறுஆய்வுக் கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    இதில் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பிசிசிஐ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் , வீரர்கள் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப தொடரில் இருந்து விலக இனிமேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி இருதரப்பு தொடரில் [bilateral series] இனிமேல் வீரர்கள் தங்கள் இஷ்டத்துக்கு முடிவெடுக்க முடியாது

    இருதரப்பு தொடர்களில் இருந்து விலக விரும்பினால், வீரர்கள் முறையான மருத்துவ காரணங்களை வழங்க வேண்டும் என்ற விதிமுறையை பிசிசிஐ வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    Next Story
    ×