என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்துக்கு 250 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

- சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின
- இப்போட்டியில் பவர்பிளேவிற்குள்ளே 3விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்ற இந்த தொடரில் களமிறங்கின. இதில் ஏ பிரிவில் இந்தியா ம்றும் நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ஏ பிரிவில் இடம்பெற்ற பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் பி பிரிவில் இடம்பெற்று இருந்த இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் - கில் ஜோடி சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தனது 300 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய விராட் கோலி 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹென்றி பந்துவீச்சில் கிளென் பிலிப்சின் அட்டகாசமான கேட்சில் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனால் பவர்பிளேவிற்குள்ளே 3விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. அடுத்ததாக ஷ்ரேயாஸ் - அக்சர் ஜோடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு ரன்களை சேர்த்தனர். கிட்டத்தட்ட 100 ரன்கள் பாட்னர்ஷிப்பை நெருங்கிய நிலையில், அக்சர் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த ஷ்ரேயாஸ் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 23 ரன்னிலும் ஜடேஜா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 45 ரன்கள் அடித்து அவுட்டானார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 249 ரன்கள் எடுத்தது.