search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 700 நாட்களுக்குப் பிறகு களம் இறங்கி சதம் விளாசிய ரிஷப் பண்ட்

    • 88 பந்தில் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட் 124 பந்தில் சதம் விளாசினார்.
    • சர்வதேச போட்டியில் இது ரிஷப் பண்டின் 6-வது சதம் ஆகும்.

    இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 376 ரன்களும், வங்கதேசம் 149 ரன்களும் எடுத்து ஆல்அவுட் ஆகின.

    பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இன்றைய 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 86 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 82 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடினார். அவர் 55-வது ஓவரின் 4-வது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து சதத்தை தொட்டார். அவர் 124 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் அடித்தார். 88 பந்தில் அரைசதம் அடித்த அவர், அடுத்த 50 ரன்னை 46 பந்தில் எட்டினார்.

    கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் சுமார் 700 நாட்களில் டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்தார். தற்போது காயத்திற்குப் பிறகு களம் இறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தியுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இது அவரின் 6-வது சதம் ஆகும்.

    Next Story
    ×