என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அணி: தொடக்க ஆட்டக்காரர் எடுத்த அதிரடி முடிவு இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அணி: தொடக்க ஆட்டக்காரர் எடுத்த அதிரடி முடிவு](https://media.maalaimalar.com/h-upload/2025/02/09/9101458-david.webp)
X
இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அணி: தொடக்க ஆட்டக்காரர் எடுத்த அதிரடி முடிவு
By
மாலை மலர்9 Feb 2025 5:53 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- எஸ்.ஏ.20 லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
- இதில் எம்.ஐ.கேப் டவுன் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
ஜோகன்னஸ்பெர்க்:
எஸ்.ஏ.20 லீக் தொடர் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்கில் நடந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், எம் ஐ கேப் டவுன் அணியும் மோதின.
இதில் எம்.ஐ.கேப் டவுன் அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இந்நிலையில், தனது அணி இறுதிப்போட்டியை எட்டியதால் தொடக்க ஆட்டக்காரர் ஒருவர் தனது திருமணத்தை ஒத்தி வைத்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் பெடிங்ஹாமுக்கு சனிக்கிழமையான நேற்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் தனது அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை அடுத்து, தனது திருமணத்தை மறுநாளுக்கு ஒத்தி வைத்தார்.
Next Story
×
X