search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் ஸ்காட்லாந்து, இங்கிலாந்து இணைந்து விளையாட ஆலோசனை
    X

    லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் ஸ்காட்லாந்து, இங்கிலாந்து இணைந்து விளையாட ஆலோசனை

    • லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் டி20 கிரிக்கெட், ஸ்குவாஷ் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
    • லாஸ் ஏஞ்சல்சில் 3-வது முறையாக ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    வாஷிங்டன்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றன. இதில் அமெரிக்கா பதக்கப் பட்டியலில் முதல் இடம்

    பிடித்து அசத்தியது. இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றது.

    இதையடுத்து, அடுத்த ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு நடைபெற உள்ளது. 34-வது ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா ஜூலை 14-ம் தேதியும், நிறைவு விழா ஜூலை 30-ம் தேதியும் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் டி20 கிரிக்கெட் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் ஸ்காட்லாந்து கிரிக்கெட் ஆகியவை இணைந்து கிரேட் பிரிட்டனாக விளையாட ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

    2026 மற்றும் 2030-ம் ஆண்டு உலகக் கோப்பைகள், விளையாட்டை வளர்ப்பதற்கும் மற்றும் கிரிக்கெட் மீதான அன்பை வளர்த்துக் கொள்ள அதிகமான மக்களை ஊக்குவிக்கவும் இது மற்றொரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

    லாஸ் ஏஞ்சல்சில் ஏற்கனவே 1932 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்துள்ளன. தற்போது அங்கு 3-வது முறையாக ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×