search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    3வது டெஸ்டில் ஒல்லி போப் அபார சதம்: முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 221/3
    X

    3வது டெஸ்டில் ஒல்லி போப் அபார சதம்: முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 221/3

    • முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் நாள் முடிவில் 221 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் கேப்டன் ஒல்லி போப் அதிரடியாக ஆடி சதமடித்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

    இதில் மான்செஸ்டர் மற்றும் லண்டன் லார்ட்சில் நடந்த முதல் இரு டெஸ்டுகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேனியல் லாரன்ஸ் 5 ரன்னில் வெளியேறினார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட்டுடன், கேப்டன் ஒல்லி போல் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

    பென் டக்கெட் அரை சதமடித்து 86 ரன்னில் அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 95 ரன்கள் சேர்த்தது. அடுத்து இறங்கிய ஜோ ரூட் 13 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் ஒல்லி போப் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 44.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்துள்ளது. ஒல்லி போப் 103 ரன்னுடன் அவுட்டாகாமல் களத்தில் உள்ளார்.

    ஓவல் மைதானத்தில் மழை பெய்ததாலும், போதிய வெளிச்சமின்மை காரணமாகவும் ஆட்டம் பல மணி நேரம் தடைபட்டது.

    Next Story
    ×