என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
தொடரின் முதல் சதம்.. சாதனை படைத்த சர்பராஸ் கானின் ஜெர்சி எண் '97' குறித்த ரகசியம் தெரியுமா?
- மும்பையைச் சேர்ந்த சர்பராஸ் கானுக்கு, இது 16-வது முதல் டெஸ்ட் போட்டி சதமாகும்
- சர்பராஸ் கானின் சகோதரன் முஷீர் கானும் 97 நம்பர் ஜெர்சியையே அணிந்துள்ளார்
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்து இருந்தது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இதனை தொடர்ந்து, இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. முதலில் களமிறங்கிய சர்பராஸ் கான் ரிஷப் பண்ட் உடன் கூட்டணி அமைத்து ஆடினார். இதில் இதில் சர்பராஸ் கான் 133 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். முதல் இன்னிங்சில் சதம் விளாசிய வீரர் என்ற பெருமை சர்பராஸ் கானுக்கு கிடைத்திருக்கிறது.
இதற்கு முன்பாக கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி , அசாருதீன்,திலீப் வெங்சர்கார், ஷிகர் தவான், சுப்மன் கில் ஆகியோர் இந்த சாதனையை படைத்திருக்கிறார்கள். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சர்பராஸ் ஸ்கோர் செய்த முதல் சதம் இதுவாகும். 113 பந்துகளில் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன்அவர் சதம் விளாசியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த சர்பராஸ் கானுக்கு, இது 16-வது முதல் டெஸ்ட் போட்டி சதமாகும். தொடர்ச்சியாக அவர் விளாசும் இரண்டாவது சதமும் இதுவே ஆகும். டோனி தொடங்கி ஒவ்வொரு வீரரும் தங்களுக்கே உரிய தனித்துவமான நம்பர் கொண்ட ஜெர்சியை அணிவது வழக்கம. இந்நிலையில் சர்பராஸ் கான் அணிந்துள்ள 97 நம்பர் ஜெர்சி குறித்த சுவாரஸ்ய விளக்கம் கிடைத்துள்ளது.
97 என்ற நமபிரின் 9 என்பது ஹிந்தியில் 'நவ்' என்று உச்சரிக்கப்டுகிறது. 7 என்பது 'சாத்' என்ற உச்சரிக்கப்படுகிறது. சேர்த்துப்படித்தால் நவுசாத். சுவாரஸ்யமானது என்னவென்றால் சர்பராஸ் கானின் தந்தை பெயர் நவ்சாத் கான். எனவேதான் சர்பராஸ் 97 நம்பர் ஜெர்சியை அணிந்துள்ளார். மேலும் சர்பராஸ் கானின் சகோதரன் முஷீர் கான், 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 2024 உலகப்கோப்பை போட்டிகளின்போது 97 நம்பர் ஜெர்சியையே அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்