search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    எனக்கு அதுதான் உலகக் கோப்பை: நாதன் லயன்
    X

    எனக்கு அதுதான் உலகக் கோப்பை: நாதன் லயன்

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
    • முதல் போட்டியில் ஒரு அணி தோல்வியை சந்தித்தால் அடுத்த 2 போட்டிகளில் முன்னேறி ஆதிக்கத்தை வெளிப்படுத்த முடியும்.

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதை தொடங்கிய இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ளன. முதல் சீசனில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்று முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

    அதன்பின் நடைபெற்ற 2-வது ஐசிசி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீ்ட்சை நடத்தின. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    3-வது முறையாக அடுத்த ஆண்டு மத்தியில் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேற அணிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக நாதன் லயன் உள்ளார். இவர் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக வென்ற ஐசிசி சாம்பியன்ஷிப் தனக்கு உலகக் கோப்பை போன்றது எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் முதல் போட்டியில் ஒரு அணி தோல்வியை சந்தித்தால் அடுத்த 2 போட்டிகளில் முன்னேறி ஆதிக்கத்தை வெளிப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

    2023 உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நாதன் லயன் இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டும் 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும் சாய்த்தார். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வருடம் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இரு அணிகளுக்கும் முக்கியமான தொடராகும்.

    Next Story
    ×