search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக ருதுராஜ், நிதிஷ் டக் அவுட்.. 107 ரன்னில் சுருண்ட இந்தியா ஏ அணி
    X

    ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக ருதுராஜ், நிதிஷ் டக் அவுட்.. 107 ரன்னில் சுருண்ட இந்தியா ஏ அணி

    • ருதுராஜ், நிதிஷ் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டக் அவுட்டில் வெளியேறினர்.
    • ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் பிரெண்டன் டோகெட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்திய ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தொடராக அமைந்துள்ளது பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது.

    இந்தத் தொடருக்கு முன்னதாக ருதுராஜ் தலைமையில் இந்திய ஏ அணியும் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. அதிகாரப்பூர்வமற்ற இந்த டெஸ்ட் தொடர் இந்திய வீரர்களுக்கு பயிற்சி போட்டிகளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ்- அபிமன்யூ ஈஸ்வரன் களமிறங்கினர்.

    ருதுராஜ் கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் அபிமன்யு 7 ரன்னிலும் சாய் சுதர்சன் 21, இந்திரஜித் 9, இஷான் கிஷன் 4, படிக்கல் 36, நிதிஷ் ரெட்டி 0, மனோவ் சுதர் 1, பிரசித் கிருஷ்ணா 0, சைனி 23 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இதனால் இந்தியா ஏ அணி 47.4 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக படிக்கல் 36 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் பிரெண்டன் டோகெட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    Next Story
    ×