search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2வது போட்டியிலும் வெற்றி: வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா
    X

    2வது போட்டியிலும் வெற்றி: வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

    • முதலில் ஆடிய இந்தியா 221 ரன்கள் குவித்தது.
    • நிதிஷ் ரெட்டி, ரிங்கு சிங் ஆகியோர் அரைசதம் கடந்தனர்.

    புதுடெல்லி:

    இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய நிதிஷ் ரெட்டி 34 பந்தில் 74 ரன்னும், ரிங்கு சிங் 29 பந்தில் 53 ரன்கள் குவித்தனர். கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா, பராக் ஜோடி அதிரடி காட்டியது.

    வங்கதேசம் சார்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட், தஸ்கின் அகமது, தன்சிம் அகமது, முஸ்தபிசுர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. இந்திய அணியின் துல்லியமான பந்துவீசி அசத்தியது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    மஹமதுல்லா மட்டும் தனி ஆளாகப் போராடி 41 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், வங்கதேசம் அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

    இந்தியா சார்பில் நிதிஷ் ரெட்டி, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி 12-ம் தேதி நடைபெறுகிறது.

    Next Story
    ×