search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    துலீப் கோப்பை: இந்திரஜித் அரை சதம்- 4 ரன்கள் முன்னிலையுடன் ஆல் அவுட் ஆன இந்தியா சி
    X

    துலீப் கோப்பை: இந்திரஜித் அரை சதம்- 4 ரன்கள் முன்னிலையுடன் ஆல் அவுட் ஆன இந்தியா சி

    • இந்தியா சி அணியில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 72 ரன்கள் விளாசினார்.
    • இந்தியா டி அணி தரப்பில் ஹர்சித் ரானா 4 விக்கெட்டுகளை அள்ளினார்.

    துலிப் கோப்பை தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணியும் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற சி அணி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி களமிறங்கிய டி அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் படேல் அரை சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 86 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இந்தியா டி அணி 48.3 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சி அணி தரப்பில் வைஷாக் 3 விக்கெட்டும் அனுஷ் காம்போஜ் ஹிமான்ஷு சவுகான் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதனையடுத்து இந்தியா சி அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ்- சுதர்சன் களமிறங்கினர். சுதர்சன் 7 ரன்னிலும் ருதுராஜ் 5 ரன்னில் வெளியேறினர். அடுத்து வந்த ஆர்யன் ஜூயல் 12, ரஜத் படிதார் 13 என ஆட்டமிழந்தனர்.

    இந்நிலையில் தமிழக வீரர் பாபா இந்திரஜித் - அபிஷேக் போரல் ஜோடி பொறுப்புடன் விளையாடிய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தது. அபிஷேக் 34 ரன்னில் அவுட் ஆனார். மானவ் சுதர் 1, ஹிருத்திக் ஷோக்கீன் 5, விஜய்குமார் வைஷாக் 1 என வெளியேறினர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திரஜித் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதியில் அவர் 72 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா சி அணி 62.2 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இந்தியா டி தரப்பில் ஹர்சித் ரானா 4 விக்கெட்டுகளை அள்ளினார்.

    Next Story
    ×