என் மலர்
கிரிக்கெட் (Cricket)
சதம் விளாசிய ஹர்லீன் தியோல்- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
- ஹர்லீன் தியோல் 115 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- மந்தனா, பிரதிகா ராவல், ரோட்ரிக்ஸ் ஆகியோர் அரை சதம் விளாசினர்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா- பிரதிகா ராவல் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் குவித்தது.
மந்தனா 53 ரன்களில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து பிரதிகா ராவல் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இது அவருக்கு முதல் அரை சதம் ஆகும்.
அடுத்து வந்த ஹர்லீன் தியோல்- கவுர் ஜோடி நிதானமாக விளையாடினர். கவுர் 22 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்லீன் தியோல் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைபதிவு செய்து அசத்தினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். ஹர்லீன் தியோல் 115 ரன்னிலும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 52 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்தது.
Congratulations Harleen Deol on scoring your first international century. ?Well played dear?#INDvsWI #harleendeol pic.twitter.com/VED5WqLqaH
— Racer S.Maneesh.Y❣️✍️ (@SManeeshY33) December 24, 2024