என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
2வது டெஸ்டில் அபார வெற்றி: வங்கதேசத்துக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றியது இந்தியா
- இந்திய அணிக்கு 95 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- இந்தியா 17.2 ஒவரில் 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து வென்றது.
கான்பூர்:
இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 27-ம் தேதி தொடங்கியது.
முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன் எடுத்து இருந்தது. மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 2-வது நாள் மற்றும் 3-வது நாள் ஆட்டமும் மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் வங்கதேசம் 233 ரன்னில் ஆல் அவுட் ஆனது. மொமினுல் ஹக் சதம் (107)அடித்தார்.
இந்தியா சார்பில் பும்ரா 3 விக்கெட்டும், முகமது சிராஜ், அஸ்வின், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, களமிறங்கிய இந்தியா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது.
இறுதியில், இந்திய் அணி முதல் இன்னிங்சில் 34.4 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 285 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இது வங்காளதேச அணியின் ஸ்கோரைவிட 52 ரன் கூடுதலாகும்.
தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் அணி அஸ்வின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 2 விக்கெட்டுக்கு 26 ரன் எடுத்திருந்தது.
இந்நிலையில், 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பாக விளையாடிய ஷத்மான் அரை சதமடித்து ஆட்டம் இழந்தார். தனி ஆளாகப் போராடிய ரஹிம் 37 ரன்னில் வெளியேறினார். இதனால் வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி சார்பில் ஜடேஜா, அஸ்வின், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மா 8 ரன்னிலும், சுப்மன் கில் 6 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஜெய்ஸ்வால், விராட் கோலி ஜோடி பொறுப்புடன் ஆடியது. ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.
மழை காரணமாக டிராவில் முடியும் என நினைத்த இந்தப் போட்டியை இந்தியா வெற்றியுடன் முடித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்