என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
ஆஸ்திரேலியா தொடரில் நிதிஷ் ரெட்டி கவனிக்கப்படும் வீரராக திகழ்வார்: மோர்னே மோர்கல்
- நினைத்ததை விட பந்துகளை மிகவும் வேகமாக அடிக்கும் பேட்ஸ்மேன்.
- விக்கெட்டுகளுக்கு இடையில் துல்லியமாக பந்து வீசுகிறார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை பெர்த்தில் தொடங்குகிறது. பொதுவாக ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். சிட்னி ஆடுகளம் மட்டும் சுழற்பந்து வீச்சுக்கு கைக்கொடுக்கும்.
இதனால் பெரும்பாலும் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் அல்லது வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டருடன் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க இந்தியா விரும்பும். அந்த வகையில் இந்தியா வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நிதிஷ் ரெட்டியுடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் "இந்திய அணியில் இடம் பிடித்துள்ள நிதிஷ் ரெட்டி மிகவும் துல்லியமாக பந்து வீசுவது மட்டுமல்லாமல், நாம் நினைப்பதை விட பந்துகளை மிகவும் வேகமாக அடிக்கும் பேட்ஸ்மேனாக திகழ்கிறார். ஆல்-ரவுண்டர் இடத்தை நிரப்ப அவருக்கு இது நல்ல வாய்ப்பாகும். ஆஸ்திரேலிய தொடரில் கவனிக்கப்படும் வீரராக திகழ்வார்" எனத் தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக திகழ்ந்தார். தற்போது அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இதனால் ஆல்ரவுண்டர் இடம் பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது.