என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
புனே டெஸ்டில் நியூசிலாந்து பேட்டிங்: இந்திய அணியில் மூன்று மாற்றங்கள்- வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு
- வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் அணியில் சேர்ப்பு.
- குல்தீப் யாதவ், முகமது சிராஜ் அதிரடி நீக்கம்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
பெங்களூருவில நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட் நவம்பர் 1-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.
இந்திய அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முகமது சிராஜ், கே.எல். ராகுல், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர், கில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி விவரம்:-
ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சர்பராஸ் கான், ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், பும்ரா.
நியூசிலாந்து அணி விவரம்:-
டாம் லாதம், கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், பிளண்டெல், கிளென் பிளிப்ஸ், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுத்தி, அஜாஸ் பட்டேல், வில்லியம் ஓ'ரூகே