search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முச்சதம் அடித்த கருண் நாயருக்கு ஏற்பட்டதுபோல் சர்பராஸ் கானுக்கு நடக்கக்கூடாது- ஆகாஷ் சோப்ரா
    X

    முச்சதம் அடித்த கருண் நாயருக்கு ஏற்பட்டதுபோல் சர்பராஸ் கானுக்கு நடக்கக்கூடாது- ஆகாஷ் சோப்ரா

    • பெங்களூரு டெஸ்டில் சர்பாராஸ் கான் 150 ரன் விளாசினார்.
    • சுப்மன் கில் அணிக்கு திரும்புவதால் 2-வது டெஸ்டில் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த போட்டியில் கழுத்து வலி காரணமாக சுப்மன் கில் விளையாடவில்லை. சர்பராஸ் கான் அணியில் இடம் பிடித்தார். முதல் இன்னிங்சில் இந்தியா 46 ரன்னில் சுருண்டது. 2-வது இன்னிங்சில் 462 ரன்கள் குவித்தது. இதற்கு சர்பாராஸ் கான் விளாசிய 150 ரன்கள் முக்கியமானதாகும்.

    2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாட சுப்மன் கில் தயாராகிவிட்டார். இதனால் சர்பராஸ் கான் நீக்கப்படலாம். அதேவேளையில் கே.எல். ராகுல் இரண்டு இன்னிங்சிலும் சரியாக விளையாடவில்லை. இதனால் சர்பராஸ் கான் அல்லது கே.எல். ராகுல் ஆகியோரில் ஒருவர் நீக்கப்படலாம்.

    ஆனால் ரோகித் சர்மா மற்றும் அணி நிர்வாகம் கே.எல். ராகுலை நீக்காது எனத் தெரிகிறது. இதனால் சர்பராஸ் கான் வெளியே இருக்க வாய்ப்புள்ளது.

    இதற்கு முன்னதாக 2016-ல் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் கருண் நாயர் முச்சதம் விளாசினார். ஆனால் அதன்பிறகு டெஸ்ட் போட்டியில் அவருக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    கருண் நாயர் அந்த போட்டியில் ரகானேவிற்குப் பதிலாக களம் இறக்கப்பட்டார். அடுத்த போட்டிக்கு ரகானே தயாரானதால் கருண் நாயருக்கு இடம் கிடைக்கவில்லை.

    சேவாக்கிற்குப் பிறகு டெஸ்ட் போட்டியில முச்சதம் அடித்த ஒரே வீரர் கருண் நாயர்தான். இருந்தபோதிலும் அதன்பிறகு அவரது டெஸ்ட் வாழ்க்கை மங்கிப்போனது.

    அதேபோல் சர்பராஸ் கானை வெளியில் வைக்கும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது. அவர் ஆடும் லெவனில் இடம்பெற வேண்டும் என இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா கூறுகையில் "அங்கு ஒரு கோட்பாடு உள்ளது. கருண் நாயர் 300 ரன்கள் அடித்தார். ஆனால் அடுத்த போட்டியில் அவர் நீக்கப்பட்டார். ஏன்?. ஏன் என்றால் அவர் ரகானோ இடத்தில் களம் இறங்கினார். ரகானே மீண்டும் அணிக்கு திரும்பியதும், கருண் நாயர் வெளியில் உட்கார வைக்கப்பட்டார். அதனோடு அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிவுக்கு வந்தது.

    இந்த கோட்பாட்டின்படி, சர்பராஸ் கான் வெளியில் உட்கார வைக்கப்படுவார். அது நடக்கக் கூடாது என நான் நினைக்கிறேன். இந்திய கிரிக்கெட்டிற்கு தற்போது முக்கியமான விசயம், வெளிப்புறத்தில் இருந்து சர்பராஸ் கானுக்கு சாதகமான ஆதரவு வெளிப்புறத்தில் இருக்கிறது" என்றார்.

    Next Story
    ×