என் மலர்
கிரிக்கெட் (Cricket)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள 21 வீரர்கள் விவரம்
- வெங்கடேஷ் அய்யரை 23.75 கோடி ரூபாய்க்கு எடுத்து ஆச்சர்யம் அளித்தது.
- பேட்டிங், பந்து வீச்சில் தரமான வீரர்களை வைத்துள்ளது.
ஐ.பி.எல். மெகா ஏலத்திற்குப் பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 21 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். ரிங்கு சிங், சுனில் நரைன், ரஸல், ராமன்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகியோரை தக்கவைத்திருந்தது.
அதுபோக 15 பேரை ஏலத்தில் எடுத்துள்ளது. டி காக், குர்பாஸ், ரகானே என தொடக்க வீரர்களும் ரஸல், ரகுவன்ஸி, வெங்கடேஷ் அய்யர் போன்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.
பந்து வீச்சில் உம்ரான் மாலிக், ஸ்பென்சர் ஜான்சன், நார்ட்ஜே போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி போன்ற நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.
ஆனால் கேப்டன் யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விவரம்:-
1. ரிங்கு சிங், 2. வருண் சக்ரவர்த்தி, 3. சுனில் நரைன் (வெளிநாட்டு வீரர்), 4. ஆண்ட்ரே ரஸல் (வெளிநாட்டு வீரர்), 5. ஹர்ஷித் ராணா, 6. ராமன்தீப் சிங், 7. வெங்கடேஷ் அய்யர், 8. குயின்டன் டி காக் (வெளிநாட்டு வீரர்), 9. ரஹ்மானுல்லா குர்பாஸ் (வெளிநாட்டு வீரர்), 10. அன்ரிச் நார்ட்ஜே (வெளிநாட்டு வீரர்), 11. ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, 12. வைபவ் அரோரா, 13. மயங்க் மார்கண்டே, 14. ஸ்பினிஷ் மார்கண்டே, 15. ரோவ்மன் பவெல் (வெளிநாட்டு வீரர்), 16. சிசோடியா, 17. அஜிங்க்யா ரஹானே, 18. அனுகுல் ராய், 19. மொயீன் அலி (வெளிநாட்டு வீரர்), 20. உம்ரான் மாலிக். 21. ஸ்பென்சர் ஜான்சன் (வெளிநாட்டு வீரர்)