என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

சொதப்பும் பேட்டிங் ஆர்டர்.. மும்பை வீரருக்கு அழைப்பு.. ஸ்கெட்ச் போட்ட சிஎஸ்கே
- சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பேட்டிங் ஆர்டர் பார்க்கப்படுகிறது.
- ருதுராஜ் இந்த சீசனில் 3-வது வீரராக களமிறங்கி விளையாடி வருகிறது.
ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல நகரங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை அணி தான் விளையாடிய 3 போட்டிகளில் 1 வெற்றி 2 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
தோல்விக்கு முக்கிய காரணமாக சென்னை அணி பேட்டிங் ஆர்டர் பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வந்த கேப்டன் ருதுராஜ் இந்த சீசனில் 3-வது வீரராக களமிறங்கி விளையாடி வருகிறது.
இதனால் தொடக்க வீரராக ராகுல் திரிபாதி களமிறங்கி உள்ளார். அவர் 3 போட்டிகளில் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை. மொத்தமாக 30 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். தீபக் ஹூடா, விஜய் சங்கர் ஆகியோரும் சிறப்பாக ஆடவில்லை. இதனை தொடர்ந்து சிஎஸ்கே அணி மும்பை வீரருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ரஞ்சி கோப்பையில் மும்பைக்காக விளையாடும் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரேவை Mid-Season Trials-காக சிஎஸ்கே அணி நிர்வாகம் அழைத்துள்ளது.
எங்களை அவர் மிகவும் கவர்ந்துள்ளார். இது ஒரு சோதனை மட்டுமே. தேவைப்பட்டால், அவரைப் பயன்படுத்துவோம் என சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.






