என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

நெருக்கடியான நேரத்தில் ஹேசில்வுட் கிரேட்..! ஆண்டி பிளவர் புகழாரம்
- அவர் சிறந்த லெந்த் பவுலிங்கிற்கு பெயர் பெற்றவர் என்பது எனக்குத் தெரியும்.
- ஆனால் அவருக்கு சிறந்த ஆல்-ரவுண்ட் திறமைகள் உள்ளன.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 11 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி த்ரில் வெற்றி பெற்றது.
இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்டுதான். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடைசி 4 ஓவரில் 46 ரன்கள் தேவைப்பட்டது. 17ஆவது ஓவரை ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரில் ஹெட்மையரை வீழ்த்தி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இதனால் கடைசி 3 ஓவரில் 40 ரன்கள் தேவைப்பட்டது. 18ஆவது ஓவரை புவி வீசினார். இந்த ஓவரில் ராஜஸ்தான் 22 ரன்கள் விளாசியது. இதனால் ராஜஸ்தானுக்கு கடைசி 2 ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் எளிதாக வெற்றி பெறும் ரசிகர்கள் நினைத்தனர்.
இந்த நிலையில்தான் 19ஆவது ஓவர் ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதுதான் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே அடிக்க ஆர்சிபி 11 ரன்னில் வெற்றி பெற்றது.
சிறப்பாக பந்து வீசிய ஹேசில்வுட் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த நிலையில் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளரான ஆண்டி பிளவர், ஹேசில்வுட்டை புகழந்துள்ளார்.
இது தொடர்பாக ஆண்டி பிளவர் கூறுகையில் "ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுத்தக்கூடியவர். அவர் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். எந்தவொரு வடிவிலான போட்டியிலும் நெருக்கடியான நிலையில் சிறந்தவர். அவர் சிறந்த லெந்த் பவுலிங்கிற்கு பெயர் பெற்றவர் என்பது எனக்குத் தெரியும், ஆனால் அவருக்கு சிறந்த ஆல்-ரவுண்ட் திறமைகள் உள்ளன.
யார்க்கர், வைடு யார்க்கர், ஸ்லோ-பால் என அசத்துகிறார். சரியான நேரத்தில் எந்த வகையான பந்தை வீச வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். இந்த சீசனில் புவி சிறப்பாக பந்து வீசி வருகிறார். ராஜஸ்தானுக்கு எதிராக யாஷ் தயால் அட்டகாசமாக பந்து வீசினார். குறிப்பாக கடைசி ஓவரில் அசத்தினார்.
இவ்வாறு ஆண்டி பிளவர் தெரிவித்தார்.






