என் மலர்
ஐ.பி.எல்.

ஐபிஎல்: புகையிலை, மதுபான விளம்பரங்களுக்கு தடை- ஐபிஎல் தலைவருக்கு சுகாதார அமைச்சகம் கடிதம்

- ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது.
- புகையிலை, மது ஆகியவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பரம் செய்வதை தடை செய்ய வேண்டும்.
18-வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்கி, மே 25-ந் தேதி முடிகிறது. இதற்கான அட்டவணையை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து விட்டது.
இந்த தொடர் 13 மைதானங்களில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறவுள்ளது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியின்போது தொலைக்காட்சிகளிலும், மைதானத்திலும் சில பொருள்களை விளம்பரம் செய்ய வேண்டாம் என ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமாலுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் கூறியதாவது:-
இந்தியாவில் அதிகம் பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வாக ஐபிஎல் இருப்பதால், புகையிலை, மது ஆகியவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பரம் செய்வதை தடை செய்ய வேண்டும்.
அதேபோல், மது அல்லது புகையிலை ஆகியவற்றின் நேரடி அல்லது மறைமுக தயாரிப்புகளை விளையாட்டு வீரர்களும், வர்ணனையாளர்களும் விளம்பரப்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.