என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    பும்ரா பந்துவீச்சை இதனால்தான் எதிர்கொண்டு அடிக்க முடிந்தது- கருண் நாயர் ஓபன் டாக்
    X

    பும்ரா பந்துவீச்சை இதனால்தான் எதிர்கொண்டு அடிக்க முடிந்தது- கருண் நாயர் ஓபன் டாக்

    • என்னுடைய பேட்டிங் குறித்து பேசுவதில் எந்த பயனும் கிடையாது.
    • பும்ரா தான் உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் அவர் எங்கு பந்து வீசப்போகிறார்? என்பதை கூர்மையாக கவனித்தேன்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை -டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணியில் கருண் நாயர் இடம்பெற்றிருந்தார்.

    ஐபிஎல் தொடரில் இடம் பிடித்திருந்தாலும் பிளேயிங் லெவனில் களமிறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் நேற்று களமிறங்கி அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

    கருண் நாயர் துவக்கத்தில் இருந்தே பவுண்டரியும், சிக்சருமாக பறக்கவிட்டு 40 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். குறிப்பாக பும்ராவின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்ட கருண் நாயர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் ஆட்டமிழந்ததும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழவே இறுதியில் டெல்லி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில் என்னுடைய பேட்டிங் குறித்து பேசுவதில் எந்த பயனும் கிடையாது என டெல்லி அணி வீரர் கருண் நாயர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த போட்டியின் போது இறுதியில் நாங்கள் தோல்வியை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும் எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்தியதாக உணர்கிறேன். ஐபிஎல் தொடரில் எப்போது வாய்ப்பு கிடைக்கும், எப்போது அசத்தலாம் என்று காத்துக் கொண்டிருந்த எனக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    தற்போதைக்கு பும்ரா தான் உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் அவர் எங்கு பந்து வீசப்போகிறார்? என்பதை கூர்மையாக கவனித்தேன். அதேவேளையில் என்னுடைய திறனை பயன்படுத்தி சரியான பந்தை சரியான திசையில் அடிக்க வேண்டும் என்று நினைத்தால் பும்ராவை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு அடிக்க முடிந்தது.

    மேலும் என்னுடைய பேட்டிங் குறித்து பேசுவதில் எந்த பயனும் கிடையாது. நான் நன்றாக ஆடினேன். ஆனால், என்னுடைய அணி தோற்றுவிட்ட பிறகு, எனது இன்னிங்ஸ்-க்கு எந்த மதிப்பும் இல்லை.

    என கருண் நாயர் கூறினார்.

    Next Story
    ×