என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐபிஎல் 2025- 8 விக்கெட் வித்தியாசத்தில்  லக்னோ அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்
    X

    ஐபிஎல் 2025- 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்

    • டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
    • பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    ஐபிஎல் 2025 தொடரின் 13-ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மார்கிராம், மிட்செல் மார்ஷ் களமிறங்கினார். இதில் மிட்செல் மார்ஷ் முதல் பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். நிக்கோலஸ் பூரன் நிதானமாக விளையாடினார். ரிஷப் பண்ட் 2 ரன்னில் வெளியேறினார். பூரன் உடன் ஆயுஷ் படோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது.

    20 ஒவர்களில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக பூரண் 44 ரன்களும், ஆயுஷ் பதோனி 41 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இதனைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் வீரர்கள் பிரியன்ஸ் ஆர்யா 8 ரன்களில் வெளியேறினார். பிரப்சிம்ரன் சிங் 69 ரன்கள் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 52 ரன்களும், நேஹால் வதேரா 43 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

    இறுதியில் பஞ்சாப் அணி 16.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    Next Story
    ×