என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    IPL 2025: ரிஷப் பண்டிற்கு தரமான பதிலடி கொடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணி
    X

    IPL 2025: ரிஷப் பண்டிற்கு தரமான பதிலடி கொடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணி

    • லக்னோவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது.
    • பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்படுவேனோ என்று பதட்டமாக இருந்தது என பண்ட் கூறியிருந்தார்.

    ஐபிஎல் 2025 தொடரின் 13-ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.

    இதனைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2025 ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக, லக்னோ அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டது குறித்து பேசிய ரிஷப் பண்ட், "எனக்கு ஒரே ஒரு பதற்றமாக இருந்தது, அது பஞ்சாப் அணியிடம் அதிகமான ஏலத்தொகை இருந்தது. ஷ்ரேயாஸ் பஞ்சாப் அணிக்கு சென்றால், நான் லக்னோ அணியால் எடுக்கப்படுவேன் என்று நினைத்தேன். ஆனால் ஏலத்தில் உங்களுக்குத் தெரியாது. அதனால் ஏலத்தை பதற்றத்துடன் பார்த்து கொண்டிருந்தேன்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், பஞ்சாப் அணியிடம் லக்னோ அணி தோல்வியை தழுவிய பின்னர், ரிஷப் பண்டை கிண்டல் செய்யும் விதமாக "ஏலத்திலேயே பதற்றம் முடிவுக்கு வந்தது" என்று பஞ்சாப் கிங்ஸ் அணி பதிவிட்டுள்ளது.

    Next Story
    ×