என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

வீடியோ: ஆக்ரோஷமான Celebration.. கே.எல்.ராகுல் கொடுத்த சுவாரஸ்ய தகவல்
- நான் செய்த Celebration எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்றான காந்தாராவில் இடம் பெற்ற காட்சி.
- இந்த மைதானம்தான் என் வீடு என்பதை மீண்டும் ஞாபகப்படுத்தவே அப்படி செய்தேன்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 164 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 93 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல். ராகுல் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார். இந்த வெற்றியை கே.எல்.ராகுல், தனது பேட்டை தரையில் வட்டமிட்டு அடித்து ஆக்ரோஷமாக கொண்டாடினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்நிலையில் ஆக்ரோஷமாக கொண்டாடியதற்காக காரணத்தை கேஎல் ராகுல் கூறியுள்ளார். அதில், சின்னசாமி மைதானம் மிகவும் ஸ்பெஷலான இடம். ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் வென்ற பின்பு நான் செய்த Celebration எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்றான காந்தாராவில் இடம் பெற்ற காட்சி. இந்த மைதானம்தான் என் வீடு என்பதை மீண்டும் ஞாபகப்படுத்தவே அப்படி செய்தேன் என ராகுல் கூறினார்.






